உத்தர பிரதேச மாநிலம் பிஜ்னோரில் ஓடும் ரயிலில் பெட்டிகள் கழன்றதால் பயணிகள் அச்சம் அடைந்தனர்.
ஃபெரோஸாபாத்தில் இருந்து தான்பாத் நோக்கிச் சென்ற ரயில், பிஜ்னோர் வந்தபோது தொழில்நுட்பக் கோளாறு காரணமாக கார்டுடன் கூடிய 13 பெட்டிகள் தனியாக கழன்றன. என்ஜினுடன் பொருத்தப்பட்ட 9 பெட்டிகள் அடுத்த ரயில் நிலையத்தை நோக்கி பயணித்தன.
இதனிடையே, கழன்ற பெட்டியில் இருந்த ரயில்வே கார்டு, ஓட்டுநரை தொடர்புகொண்டு நிலவரத்தை விளக்கினார். அதன்பின்னர், தனியாக கழன்ற பெட்டிகள் தாமாக வேகம் குறைந்து நின்றன. இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.