ஒடிசா மாநிலம், பூரி கடற்கரையில் கிருஷ்ண ஜெயந்தியை கொண்டாடும் வகையில் மணற்சிற்பம் வரையப்பட்டது.
இதனை மணற்சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக் வடிவமைத்தார். வெண்ணெய் பானைகளுக்கு நடுவே கிருஷ்ணர் அமர்ந்திருப்பது போன்ற அச்சிற்பத்தின் கீழே, அதர்மத்தை அழித்திடு எனும் பொருள்படும்படியான ஆங்கிலச் சொல் இடம்பெற்றிருந்தது.
மேலும், கிருஷ்ணரை பக்தர்கள் வழிபடுவது போலவும் வடிவமைக்கப்பட்டிருந்தது. இந்த மணற்சிற்பத்தை பலரும் கண்டு ரசித்தனர்.