வரும் 29ஆம் தேதி மத்திய கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய வடக்கு வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக வானிலை மையம் விடுத்துள்ள பதிவில், மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக 26.08.2024 மற்றும் 27.08.2024: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் .
28.08.2024 முதல் 01.09.2024 வரை: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:
அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35-36° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28 – 29° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்):
தாலுகா அலுவலகம் பந்தலூர் (நீலகிரி) 7, தேவாலா (நீலகிரி), வூட் பிரையர் எஸ்டேட் (நீலகிரி) தலா 3, கூடலூர் பஜார் (நீலகிரி), விண்ட் வொர்த் எஸ்டேட் (நீலகிரி), மேல் கூடலூர் (நீலகிரி), கேஆர்பி அணை (கிருஷ்ணகிரி), சிறுவாணி அடிவாரம் (கோயம்புத்தூர்) தலா 1 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.