ஜம்மு- காஷ்மீர் சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது.
ஜம்மு- காஷ்மீர் சட்டப் பேரவைக்கு அடுத்த மாதம் 18, 25 மற்றும் அக்டோபர் 1 ஆகிய தேதிகளில் மூன்று கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி, 44 வேட்பாளர்கள் அடங்கிய முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட பாஜக உடனடியாக அதைத் திரும்ப பெற்றது.
பின்னர், 15 வேட்பாளர்கள் கொண்ட பட்டியல் வெளியானது. தற்போது இரண்டாம் கட்ட பட்டியலையும் பாஜக தலைமை வெளியிட்டுள்ளது. அதில் ஒரே ஒரு வேட்பாளரின் பெயர் மட்டும் இடம்பெற்றுள்ளது. அந்த வகையில், கான்கெர்நாக் தொகுதியில் பாஜக வேட்பாளராக செளத்ரி ரோஷன் ஹுசைன் போட்டியிடுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.