சென்னை வேளச்சேரியில் ஃபேன்சி கடையில் ஏற்பட்ட தீ விபத்தை தீயணைப்புத் துறையினர் போராடி அணைத்தனர்.
வேளச்சேரி தண்டீஸ்வரம் நகரில் முதல் தளத்தில் அமைந்திருந்த பேன்சி கடையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு 4 வாகனங்களில் சென்ற தீயணைப்புத்துறையினர், ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போராடி தீயை அணைத்தனர்.
தீ விபத்தால் அப்பகுதி முழுவதுமே புகை மண்டலமாக காட்சியளித்தது. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.