லடாக்கில் புதிய 5 மாவட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ள நிலையில் மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
லடாக்கில் 5 புதிய மாவட்டங்களை உருவாக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பிரதமர் மோடி விடுத்துள்ள பதிவில், லடாக்கில் ஐந்து புதிய மாவட்டங்களை உருவாக்குவது சிறந்த நிர்வாகம் மற்றும் செழிப்புக்கான ஒரு படியாகும்.
ஜன்ஸ்கர், ட்ராஸ், ஷாம், நுப்ரா, சங்தங் ஆகியவை அதிக கவனம் பெறும். இதன் மூலம் சேவைகள் மற்றும் வாய்ப்புகளை மக்களுக்கு சென்று சேரும். லடாக் மக்களுக்கு வாழ்த்துகள் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.