திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே நடந்த பட்டாசு ஆலை வெடிவிபத்து தொடர்பாக இருவரை போலீசார் கைது செய்தனர்.
பூலாமலை அடிவாரத்தில் உள்ள தோட்டத்தில் அனுமதியின்றி வெடி தயாரித்தபோது ஏற்பட்ட விபத்தில் இருவர் உடல் சிதறி பலியாகினர்.
இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், ஏரக்காப்பட்டியில் தலைமைறைவாக இருந்த பட்டாசு ஆலை உரிமையாளர் செல்வம், மேலாளர் பிரசாத் ஆகிய இருவரை கைது செய்தனர். இருவரிடமும் வெடிவிபத்து தொடர்பாக தொடர் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.