டெல்லி மதுபான கொள்கை விவகாரத்தில் பாரத ராஷ்டிர சமிதி நிர்வாகி கவிதாவுக்கு ஜாமீன் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
டெல்லி மதுபான கொள்கை முறைகேடு புகாரில் கவிதாவை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர். தனது அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி, இடைத்தரகர்களுக்கு அவர் உதவியதாக எழுந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில் ஜாமீன் கோரி கவிதா டெல்லி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து உச்சநீதிமன்றத்தில் அவர் மேல்முறையீடு செய்த நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் பி.ஆர்.கவாய் மற்றும் கே.வி. விஸ்வநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது கவிதா மீதான குற்றச்சாட்டை உறுதிப்படுத்துவதற்கான ஆவணத்தை தாக்கல் செய்யுமாறு சிபிஐ மற்றும் அமலாக்கத் துறைக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணை நிறைவில் கவிதாவுக்கு ஜாமீன் வழங்கினர்.