நடிகர் ரஜினிகாந்த் பேச்சு எதிரொலி - ஓரங்கட்டப்படுகிறாரா அமைச்சர் துரைமுருகன்!
Sep 11, 2025, 05:47 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நடிகர் ரஜினிகாந்த் பேச்சு எதிரொலி – ஓரங்கட்டப்படுகிறாரா அமைச்சர் துரைமுருகன்!

Web Desk by Web Desk
Aug 27, 2024, 03:27 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

உதயநிதி ஸ்டாலினை துணை முதலமைச்சராக்கும் முயற்சிக்கு தடையாக இருக்கும் துரைமுருகனை ஓரங்கட்டுவதற்கான பணிகள் தொடங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதற்கு வழிவகுத்துக் கொடுத்திருக்கும் ரஜினிகாந்தின் பேச்சும், அதனைத் தொடர்ந்து எழுந்த விமர்சனங்களையும் இந்த செய்தித் தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.

தமிழக சட்டப்பேரவையில் கருணாநிதிக்கு அடுத்தபடியாக அரை நூற்றாண்டு கால அனுபவம் கண்ட துரைமுருகன், கடந்த சட்டமன்றத் தேர்தலில் காட்பாடி தொகுதியில் போட்டியிட்டு மிகக்குறைவான வாக்குகள் வித்தியாசத்திலேயே வெற்றிபெற்றார். அப்போதிலிருந்து திமுகவிற்குள்ளாகவே துரைமுருகன் மீதான விமர்சனங்கள் எழத் தொடங்கின.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்ள உள்ள நிலையில் துரைமுருகனை இடைக்கால முதலமைச்சராக்கலாம் என்ற குரல் எழுந்த நிலையில், அதற்கு எதிராக ஒட்டுமொத்த அமைச்சர்களும் உதயநிதியை துணைமுதலமைச்சராக்க வேண்டும் என குரல் எழுப்பத் தொடங்கியுள்ளனர்.

இந்த நிலையில், சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நடிகர் ரஜினிகாந்த் திமுகவின் பழைய மாணவர் துரைமுருகன் எனவும், அவரை சமாளிப்பது சாதாரண காரியம் கிடையாது என பேசி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அடுத்தர பரஸ்பர பேட்டிகள் சமூக வலைத்தளங்களில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது

அமைச்சர் துரைமுருகன் குறித்து தான் பேசமுடியாததை ரஜினிகாந்தை வைத்து பேசியிருப்பதாக மு.க.ஸ்டாலின் மீது அதிமுகவின் மூத்த தலைவர் கே.பி.முனுசாமி விமர்சனம் செய்துள்ளார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளிநாடு பயணம் மேற்கொள்ளும் நிலையில், மூத்த அமைச்சரான துரைமுருகனை இடைக்கால முதலமைச்சராக்க வேண்டும் என்ற நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமானின் பேச்சு திமுகவினர் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

திமுக பொதுச்செயலாளர் துரைமுருகனை கட்சியிலிருந்து ஓரங்கட்டுவதற்கான நடவடிக்கைகள் தொடங்கியிருப்பதாக கூறப்படும் நிலையில், அதன் ஒரு பகுதியாக துரைமுருகன் வசமிருக்கும் இலாக்காக்களில் ஒருசிலவற்றை பறிக்க முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அடுத்த நிலையில் இருக்கும் துரைமுருகனை ஓரங்கட்டினால் மட்டுமே உதயநிதி ஸ்டாலின் எந்தவித விமர்சனமுமின்றி துணை முதலமைச்சராகலாம் என்பதற்காக திட்டமிட்டு அரங்கேற்றப்படும் நாடகங்கள் தான் இவை என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்

Tags: minister duraimuruganDMKstalinRajinikanth
ShareTweetSendShare
Previous Post

டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் பிஆர்எஸ் நிர்வாகி கவிதாவுக்கு ஜாமீன் – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

Next Post

மேற்கு வங்க நடிகை புகார் – மலையாள திரைப்பட இயக்குநர் ரஞ்சித் மீது கொச்சி போலீஸார் வழக்குப் பதிவு!

Related News

இமானுவேல் சேகரன் நினைவு தினம் – நயினார் நாகேந்திரன் மரியாதை!

பாரதியார் நினைவு தினம் – உருவப் படத்திற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி, மலர் தூவி மரியாதை!

போக்குவரத்து விதிமீறல் அபராத நிலுவை தொகையை கட்டினால் மட்டுமே இன்சூரன்ஸை புதுப்பிக்க முடியும் – போக்குவரத்து போலீசார் முடிவு என தகவல்!

அன்புமணியை நீக்க மருத்துவர் ராமதாசுக்கு அதிகாரம் இல்லை – பாமக வழக்கறிஞர் பாலு விளக்கம்!

13 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்!

பாரதியார்  நினைவு தினம் – மத்திய அமைச்சர் எல்.முருகன் மரியாதை!

Load More

அண்மைச் செய்திகள்

பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரோனுக்கு எதிராக போராட்டம் – 200 பேர் கைது!

வாரணாசியில் பிரதமர் மோடி – உற்சாக வரவேற்பு அளித்த பொதுமக்கள்!

கட்டப்பஞ்சாயத்து மன்றமாக மாறிய காவல்துறையினரை கண்டு குற்றவாளிகளுக்கு குளிர்விட்டுப் போய்விட்டதா? – நயினார் நாகேந்திரன்

புதிய கட்டுப்பாடுகள் – அமெரிக்கா செல்லும் இந்தியர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைவு!

பாமகவில் இருந்து அன்புமணி நீக்கம் – ராமதாஸ் அறிவிப்பு!

வாரத்தில் 3 நாட்கள் அலுவலகம் வாங்க – ஊழியர்களுக்கு மைக்ரோசாப்ட் உத்தரவு!

நேபாளத்தில் சிக்கி தவிப்பு – உதவி கோரி வீடியோ வெளியிட்ட தமிழர்கள்!

ஐநா சபை கூட்டத்தில் அறிவுரை வழங்கிய சுவிட்சர்லாந்து – பதிலடி தந்த இந்தியா!

கனமழையை பயன்படுத்தி திருமணிமுத்தாறில் சாயக்கழிவுகள் திறப்பு – விவசாயிகள் குற்றச்சாட்டு!

சிறுமலை செல்லும் வாகனங்களுக்கு முறைகேடாக நுழைவு கட்டணம் வசூல் என புகார்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies