தஞ்சை மாவட்டம், கும்பகோணம் அருகே காண்டாமிருக கொம்பை விற்பனை செய்ய முயன்றது தொடர்பாக ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர்.
நாகப்பட்டினத்தை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரரான பெருமாள் என்பவர், தனது பணிக்காலத்தில் காண்டாமிருக கொம்பு ஒன்றை வாங்கி வைத்திருந்ததாக கூறப்படுகிறது. இதனை தற்போது விற்பனை செய்வது தொடர்பாக திருநாகேஸ்வரத்தில் உள்ள தங்கும் விடுதியில் சிலருடன் பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறார். இதுகுறித்து தகவலறிந்த வனத்துறையினர், பெருமாள் உள்பட ஐவரை பிடித்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.