கோவை மாவட்டம், பெரியநாயக்கன்பாளையம் அருகே பெண் குழந்தையை விற்ற தாய் உட்பட மூவரை போலீசார் கைது செய்தனர்.
சாமி செட்டிபாளையத்தைச் சேர்ந்த நந்தினி என்பவருக்கு கடந்த 14-ம் தேதி பெண் குழந்தை பிறந்தது. ஏற்கனவே வறுமையின் காரணமாக சிரமப்பட்டு வந்ததால் பெண் குழந்தையை விற்பனை செய்ய நந்தினி முடிவு செய்ததாக கூறப்படுகிறது.
இதனையறிந்த இடைத்தரகர் தேவிகா என்பவர், ஒரு லட்சம் ரூபாய்க்கு அனிதா என்பவரிடம் பெண் குழந்தையை விற்றுள்ளார். இதுகுறித்து குழந்தைகள் நல பாதுகாப்பு அதிகாரிகள் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிந்த போலீசார், குழந்தையின் தாய் நந்தினி, இடைத்தரகராக செயல்பட்ட தேவிகா மற்றும் குழந்தையை வாங்கிய அனிதா ஆகிய மூவரை கைதுசெய்தனர்.