உலக முதலீடுகளை ஈர்ப்பதற்காக தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் இன்று இரவு அமெரிக்காவுக்கு செல்கிறார்.
தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்க்கும் வகையில், முதலீட்டாளர்களை சந்திப்பதற்காக முதலமைச்சர் ஸ்டாலின் இன்று இரவு 10 மணிக்கு விமானம் மூலம் சென்னையில் இருந்து அமெரிக்கா புறப்படுகிறார். அமெரிக்காவில் மொத்தம் 17 நாட்கள் தங்கும் முதலமைச்சர், பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.
உயர்தர வேலை வாய்ப்பு மற்றும் உயர்தர முதலீடு ஆகியவையே இந்த பயணத்தின் நோக்கம் என தமிழ்நாடு தொழில் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி நாளை முதல் செப்டம்பர் 2ம் தேதி வரை சான்பிரான்சிஸ்கோவில் உள்ள உலகின் முன்னணி நிறுவனங்களின் பிரதிநிதிகளை முதலமைச்சர் ஸ்டாலின் சந்தித்து பேசுகிறார்.
இதனைதொடர்ந்து, பல்வேறு நாட்களில், பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் முதலமைச்சர் ஸ்டாலின் செப்டம்பர் 7-ம் தேதி வணக்கம் அமெரிக்கா என்ற சிறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். பின்னர் 17 நாட்கள் அமெரிக்கா பயணத்தை நிறைவு செய்துவிட்டு செப்டம்பர் 12ம் தேதி முதலமைச்சர் ஸ்டாலின் சென்னை திரும்புகிறார்.