விவசாயமும், கால்நடைகளும் அதிகம் உள்ள கிராமங்களுக்கு சென்று கால்நடை மருத்துவர்கள் பணியாற்ற வேண்டும் என புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி ராஜீவ் காந்தி கால்நடை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் 25வது பட்டமளிப்பு விழா கம்பன் கலையரங்கில் நடைபெற்றது. விழாவில் முதலமைச்சர் ரங்கசாமி கலந்துகொண்டு 72 மாணவ மாணவியர்களுக்கு பட்டங்கள் வழங்கினார்.
அப்போது பேசிய அவர், விவசாயத்துடன் இணைந்துள்ள கால்நடைகளுக்கு சிறந்த மருத்துவம் கிடைக்க வேண்டும் என தெரிவித்தார்.