ஜம்மு- காஷ்மீர் சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, 3-ஆம் கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது.
ஜம்மு- காஷ்மீர் சட்டப் பேரவைக்கு அடுத்த மாதம் 18, 25 மற்றும் அக்டோபர் 1 ஆகிய தேதிகளில் மூன்று கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. இதனையொட்டி, 44 வேட்பாளர்கள் அடங்கிய முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட பாஜக உடனடியாக அதனை திரும்ப பெற்றது. பின்னர், 15 வேட்பாளர்கள் கொண்ட பட்டியல் வெளியானது.
அதன்பின்னர், இரண்டாம் கட்ட பட்டியல் வெளியான நிலையில், தற்போது 29 வேட்பாளர்களுடன் 3-ஆம் கட்ட பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது.
தேவிந்தர் சிங் ராணா, நக்ரோதா தொகுதியில் போட்டியிடுகிறார். இதனிடையே, பாஜகவின் பனிஹால் தொகுதி வேட்பாளர் சலீம் பட், ஸ்ரீகுஃப்வாரா-பிஜ்பெஹாரா தொகுதி வேட்பாளர் சோஃபி யூசுப் உள்ளிட்டோர் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.