கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே அரசு பள்ளி மேற்கூரை பூச்சு இடிந்து விழுந்து மூன்று மாணவர்கள் படுகாயம் அடைந்தனர்.
ஊத்தங்கரையை அடுத்துள்ள பெரிய தள்ளபாடி அரசு மேல்நிலைப்பள்ளியில், 11-ம் வகுப்பு அறிவியல் பாடப்பிரிவில் படிக்கும் மாணவர்கள் சந்தோஷ், மணிகண்டன் மற்றும் வெங்கடேசன் ஆகிய மூவரும் வழக்கம்போல் பள்ளிக்கு வந்து, அறிவியல் பாடம் படித்துக் கொண்டிருந்னர்.
அப்போது, பள்ளியின் மேற்கூரை பூச்சு மாணவர்கள் மீது இடிந்து விழுந்தது. இதில், பலத்த காயம் அடைந்த மூன்று மாணவர்களும் முதலில் சிங்காரப்பேட்டையிலும், பின்னர், ஊத்தங்கரை அரசு மருத்துவமனையிலும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இச்சம்பவம் தொடர்பாக, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.