பராமரிப்பு பணிகள் காரணமாக பாஸ்போர்ட் சேவை இணையதளம் 3 நாட்களுக்கு இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
தொழில்நுட்ப பராமரிப்பு பணிகள் காரணமாக பாஸ்போர்ட் சேவை இணையதளம் 2024 ஆகஸ்ட் 29 இரவு 8 மணி முதல் செப்டம்பர் 2 ஆம் தேதி காலை 6 மணி வரை இயங்காது என்று சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக ஆகஸ்ட் 30-ந் தேதி திட்டமிடப்பட்டிருந்த அனைத்து சந்திப்புகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது. எனவே 30-ந் தேதி சந்திப்புக்காக உறுதி அளிக்கப்பட்டிருந்த விண்ணப்பதாரர்களுக்கு குறுஞ்செய்தி மூலம் அவர்களுக்கான சந்திப்பு குறித்து தகவல் தெரிவிக்கப்படும்.
மேலும் ஆகஸ்ட் 30 அன்று சென்னை அண்ணாசாலையில் உள்ள ராயலா டவரில் அமைந்துள்ள பிரதான அலுவலகத்தில் பொது விசாரணை அரங்கும் செயல்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.