ரஷ்ய அதிபர் புதினை பிரதமர் மோடி தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசியுள்ளார்.
இதுதொடர்பாக எக்ஸ் வலைதளத்தில் தகவல் வெளியிட்ட அவர், இருதரப்பு உறவை வலுப்படுத்துவது தொடர்பாக பேசியதாகவும், ரஷ்யா, உக்ரைன் போர் மீதான தனது கண்ணோட்டத்தை வெளிப்படுத்தியதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், அண்மையில் உக்ரைன் சென்று திரும்பிய நிலையில், இந்தப் பயணத்தின் மூலம் கிடைத்த அனுபவத்தை புதினுடன் பகிர்ந்ததாக கூறிய பிரதமர் மோடி, போருக்கு அமைதி வழியில் தீர்வுகாண வலியுறுத்தியதாகவும் தெரிவித்துள்ளார்.