சென்னை ஆர்.ஏ.புரத்தில் தமிழக முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான டாக்டர் ஹெச்.வி.ஹண்டே எழுதிய புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது
சென்னை ஆர்.ஏ.புரத்தில் பாஜக மூத்த தலைவர் ஹெச்.வி.ஹண்டே எழுதிய OUR CONSTITUTION மற்றும் சட்டமேதை அண்ணல் அம்பேத்கர் ஆகிய நூல்களின் வெளியீட்டு விழா நடைபெற்றது.
விழாவில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, நீதியரசர்கள் P.N.பிரகாஷ்,ஜெயச்சந்திரன், VIT பல்கலைக் கழக வேந்தர் விஸ்வநாதன், பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் ஆசிர்வாதம் ஆச்சாரி, மூத்த வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன் மற்றும் மூத்த பத்திரிகையாளர் ரங்கராஜ் பாண்டே ஆகியோர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து நடைபெற்ற விழாவில் OUR CONSTITUTION எனும் நூலை பாஜக மாநில தலைவர் அண்ணாமலையும், சட்டமேதை அண்ணல் அம்பேத்கர் நூலை V.I.T. பல்கலைக் கழக வேந்தர் விஸ்வநாதனும் வெளியிட்டனர்.