விருதுநகர் மாவட்டம் காளையார்குறிச்சி அருகே, கிராமத்திற்கு சொந்தமான தரிசு நிலம், அரசு புறம்போக்கு நிலமாக மாற்றப்பட்டதற்கு பொதுமக்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
சாணார்பட்டி கிராமத்தில் சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த கிராமத்திற்கு சொந்தமான சுமார் 7 ஏக்கர் தரிசு நிலத்தை, தங்களுக்கு தெரியாமல், அரசு புறம்போக்கு நிலமாக மாற்றிய வருவாய் துறைக்கு எதிர்ப்பு தெரிவித்து மாவட்ட ஆட்சியரை சந்தித்து பொதுமக்கள் மனு அளித்தனர்.