திருச்சியில் பறிமுதல் செய்யப்பட்ட குட்கா பொருட்களை குறைத்து கணக்கு காட்டிய 5 போலீசார் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
கரூரிலிருந்து, திருச்சிக்கு காரில் கடத்தி வரப்பட்ட 152 கிலோ எடையுடைய குட்கா உள்ளிட்ட போதைப்பொருளை தனிப்படை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இது குறித்து ஜீயபுரம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில், தனிப்படையினர் கைப்பற்றிய குட்கா பொருளுக்கும், காவல் ஆய்வாளர் வழக்கு பதிவு செய்ததற்கும் வித்தியாசம் இருந்துள்ளது.
இது குறித்து நடத்தப்பட்ட விசாரணையில் குற்றம் உறுதி செய்யப்பட்டதால் 5 போலீசாரையும் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது.