நீலகிரி மாவட்டம், கோத்தகிரி அருகே கடமானை வேட்டையாடி உட்கொண்ட 15 பேரை வனத்துறையினர் கைது செய்தனர்.
ஈரோடு மாவட்டம் ஆசனூரைச் சேர்ந்த பொம்மன் என்பவர் சத்தியமங்கலம் வழியாக அரசுப் பேருந்தில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது அவரது கைப்பையை சோதனையிட்டதில் கடமானின் இறைச்சியை கொண்டு செல்வது தெரியவந்தது. வனத்துறையினரின் விசாரணையில் கோத்தகிரி அருகேயுள்ள மார்வளா பகுதியில் உள்ள தோட்டத்தில் இறைச்சிக்காக கடமானை வேட்டையாடி கொன்றது தெரியவந்தது.
இதனையடுத்து கடமானை வேட்டையாடி இறைச்சியை பங்கிட்டுக் கொண்ட பொம்மன் உட்பட 15 பேரை வனத்துறையினர் கைது செய்தனர்.