சென்னை சென்ட்ரல் – அரக்கோணம் வழித்தடத்தல் மின்சார ரயில்கள் இன்று பகுதி நேரமாக ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,சென்னை சென்ட்ரல் – அரக்கோணம் வழித்தடத்தில், அரக்கோணம் பணிமனையில் இன்று மற்றும் நாளை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், சில மின்சார ரயில்கள் பகுதி நேரமாக ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, சென்ட்ரலில் இருந்து இன்று மற்றும் நாளை மதிய வேளையில் புறப்பட்டு அரக்கோணம் செல்லும் மின்சார ரயில்கள், திருவள்ளூர் – அரக்கோணம் இடையே பகுதி நேரமாக ரத்து செய்யப்படுவதாகவும், அதேபோல மறுமார்க்கமாக அரக்கோணத்தில் இருந்து சென்ட்ரல் வரும் ரயிலும் அரக்கோணம் – திருவள்ளூர் இடையே பகுதி நேரமாக ரத்து செய்யப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேபோல, சென்ட்ரலில் இருந்து திருத்தணி செல்லும் மின்சார ரயிலும் திருவள்ளூர் – திருத்தணி இடையே பகுதி நேரமாக ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.