கடல் அரசன் INS விக்ராந்தில் பிரதமர் மோடி : கடற்படை வீரர்களுடன் தீபாவளி கொண்டாட்டம்...!
Oct 17, 2026, 10:23 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

கடல் அரசன் INS விக்ராந்தில் பிரதமர் மோடி : கடற்படை வீரர்களுடன் தீபாவளி கொண்டாட்டம்…!

Murugesan M by Murugesan M
Oct 21, 2025, 07:05 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

நாட்டு மக்கள் அனைவரும் தங்கள் குடும்பத்துடன் தீபாவளி திருநாளை கொண்டாடியபோது, நாட்டை வழிநடத்தும் பிரதமர் மோடி, ஐ.என்.எஸ் விக்ராந்த் கப்பலில் இந்திய கடற்படை வீரர்களுடன் தீபாவளியை கொண்டாடி மகிழ்ந்தார். அதுகுறித்த ஒரு செய்தி தொகுப்பைத் தற்போது காணலாம்…..

இந்தியாவின் முக்கிய பண்டிகைகளுள் ஒன்றான தீபாவளி திருநாள் நாடு முழுவதும் உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது. நாட்டை பாதுகாக்க எல்லைகளில் போராடும் பாதுகாப்பு படை வீரர்களுடன் தனது தீபாவளியை பிரதமர் நரேந்திர மோடி கொண்டாடி இருக்கிறார்.

கோவாவில் உள்ள கர்வார் கடற்கரை அருகே நிறுத்தப்பட்டிருந்த விமானம் தாங்கிக் கப்பலான ஐ.என்.எஸ் விக்ராந்தில் நமது நாட்டின் கடற்படை வீரர்களுடன் இணைந்து தீபாவளியை கொண்டாடினார் பிரதமர் மோடி. முந்தைய இரவே ஐ.என்.எஸ் விக்ராந்த் போர் கப்பலுக்குச் சென்ற பிரதமர் மோடி, அங்கிருந்த கடற்படை வீரர்களுக்கு இனிப்புகளை ஊட்டிவிட்டு அவர்களுக்குத் தனது தீபாவளி வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்.

அங்குக் கடற்படை வீரர்கள் அரங்கேற்றிய பல்வேறு கலை நிகழ்ச்சிகள் பிரதமர் மோடியை மெய்சிலிர்க்கச் செய்தன. குறிப்பாகக் கடற்படை வீரர்கள் “THE VOW OF SINDOOR” என்ற தலைப்பில் பாடிய பாடலை அவர் தனது கைகளால் தாளமிட்டபடி கேட்டு ரசித்தார்.

ஐ.என்.எஸ் போர் கப்பலில் இருந்து புறப்பட்ட போர் விமானங்கள் வானில் பறந்தபடி வர்ண ஜாலங்கள் காட்ட, அதனைப் பிரதமர் மோடி மிகுந்த ஆர்வத்துடன் கண்டு ரசித்தார். தீபாவளி கொண்டாட்டத்தையொட்டி ஐ.என்.எஸ் விக்ராந்த் கப்பலில் “BARA KHANA” என்ற பெயரில் நடந்த இரவு விருந்தில் பங்கேற்ற பிரதமர் மோடி, கடற்படை வீரர்களுடன் இணைந்து உணவருந்தி தனது மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார். மறுநாள் அதிகாலை கடற்படை வீரர்கள் மேற்கொண்ட யோகா பயிற்சியையும் பிரதமர் மோடி பார்வையிட்டார்.

இந்த நிகழ்வின்போது வீரர்கள் மத்தியில் உரையாற்றிய பிரதமர் மோடி, “ஆத்மநிர்பார் பாரத்” திட்டத்தின் கீழ் இந்தியாவில் வடிவமைக்கப்பட்ட ஐ.என்.எஸ் விக்ராந்த் போர் கப்பல், இந்தியாவுடைய தன்னம்பிக்கையின் சின்னம் எனப் புகழாரம் சூட்டினார். தொடர்ந்து ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கைகுறித்து மனம் திறந்த பிரதமர் மோடி, இந்திய பாதுகாப்பு படைகளின் ஒருங்கிணைந்த செயல்பாடு பாகிஸ்தானை சரணடைய தூண்டியதாகப் பெருமிதம் தெரிவித்தார்.

முந்தைய காலங்களில் இந்தியாவில் உள்ள 125 மாவட்டங்கள் மாவோயிஸ்டுகளின் பிடியில் இருந்ததாகத் தனது உரையில் குறிப்பிட்ட பிரதமர் மோடி, பாதுகாப்பு படையினர் மற்றும் காவல்துறையின் ஒருங்கிணைந்த செயல்பாடுகளால், தற்போது அது வெறும் 11 மாவட்டங்களாகக் குறைந்துள்ளதாக தெரிவித்தார். விரைவில் இந்தியா மாவோயிஸ்ட் வன்முறைகளில் இருந்து முழுமையாக விடுபட்ட நாடாக உருவெடுக்கும் என்றும் பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்தார்.

தொடர்ந்து இந்திய பாதுகாப்பு துறையில் மேற்கொள்ளப்பட்டுள்ள வளர்ச்சி பணிகள் குறித்தும் பெருமையுடன் பேசிய பிரதமர் மோடி, பிரம்மோஸ் என்ற பெயரே சிலருக்கு பயத்தை ஏற்படுத்துவதாகவும், பல நாடுகள் இந்த ஏவுகணையை வாங்க ஆர்வமுடன் இருப்பதாகவும் பிரதமர் தெரிவித்தார். நாட்டை பாதுகாக்கும் வீரர்களுடன் கொண்டாடிய இந்த தீபாவளியை தனது வாழ்நாளில் மறக்க முடியாது எனக் குறிப்பிட்ட பிரதமர் மோடி, கலைநிகழ்ச்சியின் போது கடற்படை வீரர்கள் பாடிய தேச பக்தி பாடல்களையும் புன்னகையுடன் நினைவு கூர்ந்தார்.

மேலும், தீப ஒளியில் ஒளிரும் கடல், வீரர்கள் முகத்தில் மின்னும் பெருமை, தேசிய கொடியை தலைநிமிர்த்தும் காற்றின் ஒலி என இவை அனைத்தும் சேர்ந்து இந்த நிகழ்வை தேசத்தின் பெருமை நிறைந்த தீபாவளியாக மாற்றியுள்ளதாக பிரதமர் மோடி கூறினார்.

நாட்டின் சொந்த உற்பத்தி திறனும், இந்திய பாதுகாப்பு படைகள் உருவாக்கிய தன்னம்பிக்கையும், உலகிற்கு ஒரு புதிய இந்தியாவை அடையாளம் காட்டியுள்ள நிலையில், ஐ.என்.எஸ் விக்ராந்தில் பிரதமர் மோடியின் இந்தத் தீபாவளி கொண்டாட்டம் பாதுகாப்பு படை வீரர்களுக்கான மரியாதை மட்டுமல்ல, இந்தியா என்ற தன்னாட்சி சக்தியின் ஒரு வெற்றிக்கதை என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

Tags: PM Modiindian navyINSDiwaliPrime Minister Modi on the sea king INS Vikrant: Diwali celebration with naval personnel
Share
Tweet
SendShare
Previous Post

நாகை : தொடர் கனமழையால் 1000 ஏக்கர் குறுவை நெற்பயிர்கள் பாதிப்பு!

Next Post

இஸ்ரேல்-காசா எல்லையை பிரிக்கும் மஞ்சள் கோடு : மக்களின் உயிரை பறிக்கும் ஆபத்தாக மாறிய சோகம் !

Related News

அமெரிக்காவில் இந்து கோயில் மீது துப்பாக்கிச் சூடு நடத்த சதி – பாதுகாப்பு வழங்க இந்தியா வலியுறுத்தல்!

டெல்லியில் தடையை மீறி போராட்டம் – முன்னெச்சரிக்கை நடவடிகையாக அபிஜித் தீப்கே கைது!

மகளிர் இடஒதுக்கீடு,தொகுதி மறுவரையறை மசோதா – நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில் நிறைவேற்ற மத்திய அரசு திட்டம்!

திருப்பதி ஏழுமலையான் கோயில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா – கருட சேவை கோலாகலம்!

பகட்டை இழந்த பஞ்சப்பூர் பேருந்து நிலையம் – உருவான திடீர் கடைகளால் மாயமான பாரமரிப்பு – சிறப்பு தொகுப்பு!

ஹவுதி அச்சுறுத்தல் அதிகரிப்பு : கைகொடுக்காத மெக்கா கூட்டணி : சவுதி – இஸ்ரேல் இடையே உருவான ரகசிய ஒப்பந்தம் – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

ஆயுதபூஜை தொடர் விடுமுறை – சென்னையில் இருந்து இன்று 822 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

தமிழகம் முழுவதும் 128 இடங்களில் RSS அணிவகுப்பு நடத்த அனுமதி – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

 2025-26-ம் நிதியாண்டில் திமுக, அதிமுகவுக்கு ரூ. 260 கோடி நன்கொடை – கொல்கத்தா லாட்டரி நிறுவனம் வழங்கியது அம்பலம்!

ரூ.100 கோடி மோசடி வழக்கு; அன்பில் மகேஷ் முன் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு தள்ளிவைப்பு!

தமிழகம் முழுவதும் ஆர்.எஸ்.எஸ் பேரணி; சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி

தேர்தல் பிரச்சாரத்தில் குழந்தைகள்; உயர்நீதிமன்றம் அதிருப்தி

சொந்த ஊர் செல்லும் மக்கள்; சென்னை சென்ட்ரலில் அலைமோதும் கூட்டம்

இந்தியாவிற்கே முன்னுரிமை : நேபாள பிரதமரின் வருகை இருநாட்டு உறவில் திருப்பம் ஏற்படுத்துமா? – சிறப்பு தொகுப்பு!

4 நாட்கள் தொடர் விடுமுறை – விமான பயண கட்டணம் பன்மடங்கு உயர்வு!

திருப்பதி கோயில் நவராத்திரி பிரம்மோற்சவ 5ம் நாள் உற்சவம் கோலாகலம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies