கரூரில் சட்டவிரோத சூதாட்டத்தில் ஈடுபட்ட 30 பேர் கைது செய்யப்பட்டனர். கரூரின் பல்வேறு பகுதிகளில் சட்டவிரோதமாக சூதாட்டம் நடைபெறுவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது.
இதனையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை தீவிரமடைந்தது.
அப்போது தனியாருக்கு சொந்தமான இடத்தில் சூதாட்டத்தில் ஈடுபட்ட திருச்சி, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த 30 பேரை போலீசார் கைது செய்தனர்.
மேலும், கைது செய்யப்பட்ட நபர்களிடம் இருந்து 4 லட்சம் ரூபாய், 5 இரு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.