பல ஆண்டுகளாக பயன்படுத்தி வந்த பொதுவழியை மீட்டுக் கொடுக்கவேண்டும் என வள்ளிப்பட்டு பொதுமக்கள், திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியர் அஜிதா பேகத்திடம் கோரிக்கை மனு அளித்தனர்.
வள்ளிப்பட்டு கிராமத்தில் உள்ள பொது வழியை மாணவர்கள் பள்ளிக்குச் செல்லவும், திருவிழா உள்ளிட்ட பல்வேறு விஷயங்களுக்கும் மக்கள் பயன்படுத்தி வந்தனர்.
இந்நிலையில், அந்த வழித்தடம் தனக்கு சொந்தம் என சுப்பிரமணி என்பவர், பட்டா பெற்றதோடு அந்த வழியை மற்றவர்கள் பயன்படுத்த தடை விதித்துள்ளார். இதனால், பாதிக்கப்பட்டவர்கள் பொது வழியை மீட்டுத் தருமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.