அரியலூரில் வீட்டின் பூட்டை உடைத்து 15 சவரன் நகைகளை கொள்ளையடித்துச் சென்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
திருமானூர் ஸ்ரீராம் நகரை சேர்ந்த ரமேஷ் குமார் என்பவர் மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவரது வீட்டில் இருந்த அனைவரும் வெளியூர் சென்ற நிலையில், ஆளில்லாததை நோட்டமிட்ட மர்மநபர்கள் சிசிடிவி கேமராவை சேதப்படுத்தி வீட்டின் உள்ளே நுழைந்துள்ளனர்.
அப்போது வீட்டில் இருந்த 15 சவரன் நகை மற்றும் வெள்ளிப் பொருட்களை திருடிச் சென்றுள்ளனர். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த திருமானூர் காவல் நிலைய போலீசார், தடயங்களை சேகரித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.