நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே குடிநீர் வழங்காததை கண்டித்து 200க்கும் மேற்பட்ட பெண்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்
பிள்ளாநல்லூர் பேரூராட்சியின் 15வது வார்டில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. அப்பகுதியில் கடந்த 40 நாட்களாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த பெண்கள் காலிக்குடங்களுடன் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்து வந்த காவல்துறையினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டபின் போராட்டம் கைவிடப்பட்டது.