தமிழ்நாட்டில் சுலபமாக, எளிதாக தொழில் தொடங்கும் வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்க திமுக அரசு தவறி விட்டது என பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார்.
அவருடன் நமது செய்தியாளர் நாகராஜன் நடத்திய கலந்துரையாடலின் போது கூறியதை தற்போது பார்க்கலாம்…
“முதல்வரின் வெளிநாட்டு முதலீடுகள் 10-ல் ஒரு பங்கு கூட தமிழ்நாட்டுக்கு பயன் தரவில்லை. தமிழ்நாட்டில் தொழில் தொடங்க சாத்தியக்கூறுகள், வசதி வாய்ப்புகளை திமுக செய்து கொடுக்கவில்லை. அந்நிய முதலீடுகளுக்கான எவ்வளவு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. எந்தெந்த நிறுவனங்கள் முதலீடுகளை செய்துள்ளது என்பது குறித்த வெள்ளை அறிக்கைசு வெளியிட வேண்டும்.
“சுலபமாக, தொழில் தொடங்கும் வாய்ப்புகளை ஏற்படுத்த தமிழக அரசு தவறி வருகிறது. தமிழகத்தில் தொழில் தொடங்க சட்டம் ஒழுங்கு, ஊழல், லஞ்சம் முட்டுக்கட்டை போடுகிறது. பறந்தூர் சுற்றியுள்ள மக்களை சமாளிக்க முடியாத அரசு எப்படி முதலீடுகளை கொண்டுவரும்?. எதிர்க்கட்சியாக இருந்த திமுக, தொழில் நிறுவனங்களுக்கு எதிராக போராடியதால் தற்போது சுணக்கம் ஏற்பட்டுள்ளதாக நாராயணன் திருப்பதி தெரிவித்தார்.