தமிழகத்திற்கு முதலீடுகளை ஈர்க்க 17 நாட்கள் அரசுமுறைப் பயணமாக அமெரிக்கா புறப்பட்ட முதலமைச்சர் ஸ்டாலின் இன்று அதிகாலை அங்கு சென்றடைந்தார்.
தமிழகத்திற்கு முதலீடுகளை ஈர்க்க முதலமைச்சர் ஸ்டாலின் 17 நாட்கள் அரசுமுறைப் பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். நேற்று முன் தினம் இரவு 10 மணியளவில் சென்னையில் இருந்து எமிரேட்ஸ் விமானம் மூலம் புறப்பட்டார்.
அவருக்கு அமைச்சர்கள், எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள், திமுக தொண்டர்கள், என பலரும் வாழ்த்து தெரிவித்து வழியனுப்பி வைத்தனர். இந்நிலையில் இன்று அதிகாலை முதலமைச்சர் ஸ்டாலின் அமெரிக்கா சென்றடைந்தார். அவருக்கு பூங்கொத்து கொடுத்தும் கலை நிகழ்ச்சிகள் நடத்தியும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.