உத்தரப்பிரதேசத்தில் 8 பேரை தாக்கி கொன்ற ஓநாயை வனத்துறையினர் கூண்டு வைத்து பிடித்தனர்.
உத்தரப்பிரதேசத்தின் பஹ்ரைச் மாவட்டம் பஹ்ரைச் பகுதியில் கடந்த சில நாட்களாக ஓநாய்கள் சுற்றித்திரிவதால் கிராம மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர். அடர்ந்த வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஓநாய்கள் ஊருக்குள் புகுந்து வீடுகளில் தூங்கி கொண்டிருக்கும் குழந்தைகளை தாக்கி கொன்றுள்ளன.
கடந்த 45 நாட்களில் 6 குழந்தைகள், ஒரு பெண் உள்ளிட்ட 8 பேர் உயிரிழந்த நிலையில், ஓநாய்களை பிடிக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு வந்தனர்., பஹ்ரைச் பகுதியில் கூண்டுகளை வைத்தும், ட்ரோன் கேமராக்களை பறக்க விட்டும் வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
இந்நிலையில், வனத்துறை வைத்த கூண்டில் ஓநாய் சிக்கியது. இதனையடுத்து மருத்துவ சோதனைக்கு பிறகு அடர்ந்த வனப்பகுதிக்குள் விட வனத்துறையினர் முடிவு செய்துள்ளனர்.