மதுரையில் முதலமைச்சரின் சகோதரரின் வீட்டின் முன்பு குடிநீருக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் சிக்கி தவிக்கும் லாரிகளால் பள்ளி மாணவர்கள் அவதிக்குள்ளாகினர்.
மதுரை மாநகராட்சிக்குட்பட்ட லட்சுமிபுரம் சேசுமகால் சாலையில் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் வீடு அமைந்துள்ளது.
இந்த சாலையில் குடிநீர் குழாய் பணிகளுக்காக தோண்டப்பட்ட பள்ளங்கள் முறையாக மூடப்படாமல் இருக்கின்றன. இந்நிலையில் அரவை ஆலையில் இருந்து அரிசி மூட்டைகளை ஏற்றிவரும் லாரிகள் பள்ளங்களில் சிக்கி கொள்வதால் போக்குவரத்துக்கு தடை ஏற்பட்டு மாணவர்கள் அவதிப்படுகின்றனர்.
மேலும், சாலையை சீரமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.