சேலம் சுங்கச்சாவடிகளில் மாதாந்திர கட்டணம் மட்டுமே உயர்த்தப்படும் என்ற அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள 28 சுங்கச் சாவடிகளில் வரும் செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் சுங்கச் சாவடி கட்டணம் உயர்த்தப்படும் என்ற அறிவிப்பு வெளியானது. இதனால் கட்டணத்தை குறைக்க வலியுறுத்தி லாரி உரிமையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில் சேலம் மாவட்டம் மேட்டுப்பட்டி சுங்கச்சாவடியில் தினசரி கட்டணம் உயர்த்தப்படாமல் மாதாந்திர கட்டணம் மட்டுமே 15 ரூபாயில் இருந்து 50 ரூபாய் வரை உயர்த்தப்படவுள்ளது. இது வாகன ஓட்டிகள் மத்தியில் நிம்மதி பெருமூச்சை ஏற்படுத்தியுள்ளது.