கரூர் அருகே சாலை அமைப்பதில் ஏற்பட்ட பிரச்சனையின் போது திமுக நிர்வாகி மீது தாக்குதல் நடத்தியதாக ஊராட்சி மன்ற துணை தலைவர் கைது செய்யப்பட்டார்.
வெள்ளியணை அருகே சூர்யா நகர் பகுதியில் சிமெண்ட் சாலை அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த திமுக கிளை செயலாளர் லோகநாதன் என்பவர் தனக்கு சொந்தமான பட்டா நிலத்தில் சிமெண்ட் சாலை போடக்கூடாது என ஒப்பந்ததாரரிடம் வலியுறுத்தியுள்ளார்.
அப்போது வெள்ளியணை ஊராட்சி துணைத்தலைவர் சிவகுமார் மற்றும் லோகநாதனுக்கு இடையே ஏற்பட்ட வாக்குவாதம் கைகலப்பாக மாறியது. இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், சிவக்குமாரை கைது செய்தனர்.