திருப்பத்தூர் மாவட்டம், புதூர்நாடு மலைப்பகுதியில் சரக்கு வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 24 பேர் படுகாயமடைந்தனர்.
நெல்லிவாசல் மலையில் நடைபெற்ற சுப நிகழ்ச்சியொன்றில் கலந்து கொள்வதற்காக 40-க்கும் மேற்பட்டோர் சரக்கு வாகனத்தில் சென்றுள்ளனர். அப்போது திருப்பத்தூர் அருகே சாலை வளைவில் திரும்பும்போது கட்டுப்பாட்டை இழந்த சரக்கு லாரி சாலையோரத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில் படுகாயமடைந்த 24 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவற்றில் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ள மூவர் மேல்சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.