நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் சுற்றுவட்டார பகுதிகளில் இரவில் உலா வரும் கரடியால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
மணிமுத்தாறு, செட்டிமேடு, ஆலடியூர் உள்ளிட்ட பகுதிகளில் இரவு நேரங்களில் கரடி உலா வரும் சிசிடிவி காட்சிகள் பரவி வருகிறது. இதனால் அச்சமடைந்த பொதுமக்கள் கரடியை விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.