நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கையில் ரத்த காயத்துடன் ரகளையில் ஈடுபட்ட நபரால் பரபரப்பு ஏற்பட்டது.
கொக்கிர குளத்தை சேர்ந்த அருண்குமார் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதாக கூறப்படுகிறது. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட வழக்கு ஒன்றில் வாய்தாவுக்கு ஆஜராகும்படி அருண்குமாருக்கு நீதிமன்றம் சம்மன் அனுப்பியதாக தெரிகிறது.
இதையடுத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு கையில் ரத்த காயத்துடன் வந்த அருண்குமார், போலீசாரை தடுத்து நிறுத்தி ரகளையில் ஈடுபட்டார். உதவி காவல் ஆய்வாளர் தங்கத்தால் தனது வாழ்க்கை நாசமாகிவிட்டதாகவும், பசிக்காக திருட்டில் ஈடுபட்ட தன்னை முழுநேர குற்றவாளியாக மாற்றிவிட்டதாகவும் அருண்குமார் ஒருமையில் பேசியதால் பரபரப்பு ஏற்பட்டது. அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.