விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் ரயில் நிலையத்தில் பெண்ணின் கைப்பையை மர்ம நபர் திருடி செல்லும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.
சேத்தூர் கட்டபொம்மன் நகரைச் சேர்ந்த வேணி என்பவர் மேல்மருவத்தூர் கோவிலுக்கு செல்ல டிக்கெட் முன்பதிவு செய்வதற்காக ராஜபாளையம் ரயில் நிலையத்திற்கு சென்றுள்ளார்.
அங்கு அவரை வெகு நேரமாக நோட்டமிட்ட நபர், வேணியின் கைப்பையை கண் இமைக்கும் நேரத்தில் தூக்கிச் சென்றார். கைப்பையில் 35 ஆயிரம் பணம் இருந்ததால், இதுகுறித்து வேணி அளித்த புகாரின் பேரில் போலீசார் மர்மநபரை தேடி வருகின்றனர்.