தேசிய நல்லாசிரியர் விருதை, மாணவர்களுக்கும், உடன் பணியாற்றும் ஆசிரியர்களுக்கும் சமர்ப்பிப்பதாக விருது பெறவுள்ள ஆசிரியர் கோபிநாத் தெரிவித்துள்ளார்.
ஆசிரியர் தினத்தை முன்னிட்டு தேசிய நல்லாசிரியர் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதில் வேலூர் மாவட்டம், குடியாத்தம் அடுத்த ராஜா குப்பம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி ஆசிரியர் கோபிநாத்துக்கும் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக ஜனம் தமிழ் செய்தியாளரிடம் பேசிய அவர், மாணவர்களுக்கு கல்வி இனிமையாகவும், எளிமையாகவும் அமைய வேண்டும் என்பதே தனது நோக்கம் என்று தெரிவித்தார். ஆசிரியர் தினத்தன்று குடியரசுத் தலைவர் கைகளால் விருதை பெறவுள்ளது மிகுந்த மகிழ்ச்சியளிப்பதாகவும் அவர் கூறினார்.