2025- ம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, விலையில்லா வேட்டி, சேலை வழங்கும் திட்டத்திற்கு 100 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதில், 2025 -ம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு ஒரு கோடியே 77 லட்சத்து 64 ஆயிரத்து 476 சேலைகளும், ஒரு கோடியே 77 லட்சத்து 22 ஆயிரத்து 995 வேட்டிகளையும் உற்பத்தி செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளது
வேட்டி, சேலை வழங்கும் திட்டத்தினை, குறிப்பிட்ட காலத்திற்குள் உற்பத்தி செய்து வழங்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
பயனாளிகளுக்கு வேட்டி, சேலைகள் கிடைப்பதை உறுதி செய்ய விரல் ரேகைப் பதிவை கட்டாயமாக்க வேண்டும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நடைமுறைகளை கண்காணிக்கும் வகையில் வருவாய்த்துறை முதன்மைச் செயலாளர் தலைமையில் குழு அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.