திருச்சி திருவானைக்காவல் கோயிலின் ஆடித் தீர்த்த தெப்பக்குளம் 55 ஆண்டுகளுக்கு பிறகு நிரம்பியதால் பக்தர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
திருச்சி திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோயில் பஞ்சபூத ஸ்தலங்களில் நீர் ஸ்தலமாக விளங்கி வருகிறது. கோச்செங்கட் சோழனால் கட்டப்பட்ட இக்கோயிலின் தெப்பக்குளத்திற்கு பல ஆண்டுகளாக மின் மோட்டர் மூலமே நீர் நிரப்பப்பட்டு தெப்பத் திருவிழா நடத்தப்பட்ட வந்தது.
இந்நிலையில் நீர் வரும் வாய்க்கால்கள் சீரமைக்கப்பட்டதால், காவிரி நீரால் தெப்பக்குளம் நிரம்பியது. 55 ஆண்டுகளுக்கு பிறகு காவிரி நீரால் தெப்பக்குளம் நிரம்பியது பக்தர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.