சிவகங்கையில் பத்திர பிழை திருத்தம் செய்ய லஞ்சம் வாங்கிய சார் பதிவாளர் மற்றும் இடைத்தரகர் கைது செய்யப்பட்டனர்.
கோளாந்தி கிராமத்தை சேர்ந்த அற்புதம் வீட்டுமனை பத்திரத்தில் பிழை திருத்தம் செய்ய சார்பதிவாளர் அலுவலகத்தை நாடியுள்ளார். அப்போது பிழை திருத்தம் செய்யாமல் சார் பதிவாளர் ஈஸ்வரன், இடைத்தரகர் கண்ணன் மூலம் 18 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார்.
இதுகுறித்து அற்புதம் புகாரளித்த நிலையில் ரசாயனம் தடவிய ரூபாயை கண்ணனிடம் வழங்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்தினர். இதனையடுத்து அற்புதத்திடம் இருந்து கண்ணன் லஞ்சம் பெற்றபோது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் இருவரையும் கைது செய்தனர்.