விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் பெண்களை மிரட்டி நகைப்பறிப்பில் ஈடுபட்ட கொள்ளையர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த ராமலட்சுமி சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனத்தில் சென்ற மர்ம நபர்கள் அவரை மிரட்டி 8 பவுன் தங்க சங்கிலியை பறித்துச் சென்றனர்.
அதனைத்தொடர்ந்து சடையம்பட்டியில் கல்லூரி பேராசிரியரிடமும் மர்ம நபர்கள் நகைக்கொள்ளையில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்த போலீசார் மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.