ராணுவத்தில் பெண்களின் பங்களிப்பு அதிகரித்து வருவதாக பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், நாடு விடுதலை அடைந்தபோது பெண்களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டதாவும், தற்போது நிலைமை மேம்பட்டு விட்டதாகவும் கூறினார்.
தாம் உள்துறை அமைச்சராக பதவி வகித்தபோது, காவல் துறையில் மூன்றில் ஒரு பங்கு இடத்தைப் பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யுமாறு அனைத்து மாநிலங்களையும் அறிவுறுத்தியதாகவும், இதன்மூலம் காவல் மற்றும் ராணுவத்தில் பெண்களின் பங்களிப்பு அதிகரித்ததாகவும் ராஜ்நாத் சிங் குறிப்பிட்டார்.
பாதுகாப்புப் படைகளில் பெண்கள் இணைவதற்கான தடைகள் நீக்கப்பட்டுவிட்டதாகவும், இன்றைக்கு சைனிக் பள்ளிகளில் பெண்கள் சேர்க்கை பெறுவதையும் அவர் நினைவுகூர்ந்தார்.
பெண்களுக்கு என தேசிய பாதுகாப்பு அகாடெமி தொடங்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருவதாக கூறிய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், இஸ்லாமியர்கள் மத்தியில் நடைமுறையில் இருந்த முத்தலாக் முறை சட்டப்படி ஒழிக்கப்பட்டதையும் அப்போது சுட்டிக்காட்டினார்.