மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே நீட் தேர்வில் வெற்றி பெற்று, உள் ஒதுக்கீடு மூலம் அரசுப்பள்ளி மாணவி மருத்துவம் படிக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார்.
தரங்கம்பாடி தாலுகா ஆக்கூர் கிராமத்தை சேர்ந்த கூலித் தொழிலாளிகள் சந்திரசேகர் விஜயா தம்பதியினர். இவர்களது மகள் சந்திரோதயா 3-வது முறையாக நீட் தேர்வு எழுதி வெற்றி பெற்றுள்ளார்.
நீட் தேர்வில் 497 மதிப்பெண்கள் எடுத்த வெற்றி பெற்ற அவருக்கு 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டின் மூலம் நீலகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மருத்துவம் படிப்பதற்கு இடம் கிடைத்துள்ளது. விடா முயற்சியால் வெற்றி பெற்ற மாணவிக்கு பொதுமக்களும், ஆசிரியர்களும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.