கேரள திரையுலகில் நடிகைகள் மீதான பாலியல் அத்துமீறல் தொடர்பாக எழுந்துள்ள புகார்கள் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன. திரையுலகின் இருண்ட பக்கத்தை அம்பலப்படுத்தியுள்ள இந்த சம்பவத்தின் பின்னணியில் இருப்பவர்கள் யார்? என்பது பற்றி தற்போது பார்ப்போம்.
முற்போக்கு தன்மை நிறைஞ்ச கதைகளை உருவாக்கி மத்த மாநிலங்களோட திரையுலகத்தையே திரும்பி பாக்க வைச்ச மலையாள திரையுலகத்துல அடுத்தடுத்து நடக்கக் கூடிய சம்பவங்கள் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கு. ஆணாதிக்க சிந்தனை தொடர்பாகவும், பாலியல் வன்முறையால பாதிக்கப்பட்ட நடிகைகள் தொடர்பாகவும் சமீபத்துல வெளியான கேரள உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி ஹேமா தலைமையில அமைக்கப்பட்ட கமிட்டியோட ரிப்போர்ட் மலையாள திரையுலகத்தையே புரட்டி போட்டுருக்கு. பட வாய்ப்புக்காக பாலியல் ரீதியாக பெண்கள் துன்புறுத்தப்பட்டதாக அந்த கமிட்டி உறுதி செய்துள்ளது.
2017 ஆம் ஆண்டு மலையாள நடிகை ஒருவர் கடத்தப்பட்டு பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்துச்சு. அந்த சம்பவத்துக்கு காரணமா இருந்ததா முன்னடி நடிகர் திலீப் மீது குற்றச்சாட்டும் எழுந்தது. அதன் தொடர்ச்சியா மலையாள திரைத்துறையில் நடக்கும் காஸ்டிங் கவுச் சம்பந்தமா விசாரிக்கிறதாக ஓய்வுபெற்ற நீதிபதி ஹேமா தலைமையில ஆணையம் அமைக்கப்பட்டது.
பல சவால்களுக்கு மத்தியில விசாரணையை முடிச்ச அந்த ஆணையம் தன்னோட அறிக்கையை 2019 டிசம்பரில் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன்கிட்ட வழங்கியது. அந்த அறிக்கை மேல கேரள அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்காத நிலையில, கேரளவோட முன்னணி குணச்சித்திர நடிகரும், அம்மா சங்கத்தோட பொதுச்செயலாளருமான சித்திக் தன்னை ஒரு அறையில பூட்டிவச்சு அருவருக்கத்தக்க வகையில நடந்துகிட்டதா நடிகை ரேவதி சொன்ன தகவல் ஒட்டுமொத்த திரையுலகத்தயுமே கதிகலங்க வச்சது.
பெண்களை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்குவது குறித்து விசாரணை நடத்திய நீதிபதி ஹேமா தலைமையிலான ஆணையம் சமர்பிச்ச அறிக்கை நாலறை வருசத்துக்கு பின்னாடி இப்ப வெளிவந்திருக்கு. 290 பக்கங்கள் கொண்ட அந்த அறிக்கையில பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளான ஒரு பெண், அடுத்த நாள் முதலே அதே நபருடன் கணவன் – மனைவியாக கட்டிப்பிடித்து நடிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டிருப்பது இந்த விவகாரத்தின் தீவிரத்தன்மையை உணர்த்தியது.
சினிமாத்துறைக்கு வரக்கூடிய பெண்கள் பணம் சம்பாதிக்கிறதுக்காக மட்டுமே வராங்க, எதுக்கு வேணும்னாலும் தயாரா இருப்பானங்கனு பலருக்கு பொதுவான அனுமானம் இருக்கு. ஆனா, கலை மற்றும் நடிப்பு மீதான ஆர்வத்தால தான் பெண்கள் நடிக்க வராங்க என்பதை சினிமா துறையில் உள்ள ஆண்கள் கற்பனை கூட செய்ய முடியாத சூழலில் தான் இருக்காங்க என்பதையும் அந்த அறிக்கை வெளிக்கொண்டு வந்துருக்கு.
மலையாள திரையுலகில் வலுவான கூட்டம் ஒன்னு, மாபியோ போல இயங்கிட்டு இருக்குறதாகவும், தேவைப்படும் போது பெண்கள் பாலியல் உறவுக்கு தயரா இருக்கனும்ங்குறதுக்காகவே சமரசம் மற்றும் ஒத்துப்போதல் இந்த ரெண்டு வார்த்தை மலையால திரையுலகத்துல உருவாக்கப்பட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கு…
ஹேமா ஆணையத்தோட அறிக்கை விவாதப் பொருளா மாறியிருக்க நிலையில, பல நடிகைகள் தாங்கள் பட்ட பாதிப்புகளையும், துன்புறுத்தல்களையும் வெளிப்படையா பேசத் தொடங்கியிருக்காங்க. பிரபல இயக்குனரும், மலையால சினிமா அகாடமி தலைவருமான ரஞ்சித் மேல பெங்காலி மொழி நடிகை ஸ்ரீலேகா பாலியல் புகார் அளிச்சுருகாங்க.
அதோட முன்னணி நடிகர்களான முகேஷ், மணியம்பிள்ளை ராஜு, இடைவேளை பாபு, ஜெயசூர்யா, ரியாஸ்கான் என பலர் மேல பாலியல் புகார்கள் குவிஞ்சுகிட்டே இருக்கு. குற்றச்சாட்டின் தன்மை தீவிரமான நிலையில அம்மா அமைப்போட பொதுச்செயலாளர் பதவியை நடிகர் சித்திக் ராஜினாமா செஞ்சுருக்காரு. அதன் தொடர்ச்சியா மலையாள நடிகர் சங்கத் தலைவர் மோகன்லாலும், அவரோடு மற்ற நிர்வாகிகளும் ராஜினாமா செஞ்சுருக்கதால அம்மா குழு மொத்தமும் கலைக்கப்பட்டுருக்கு. நடிகர் சித்திக் மேல வழக்கு பாய்ஞ்சுருக்க நிலையில, குற்றம் சாட்டப்பட்ட 18 பேர் மேலயும் வழக்கு பாயும்னு தகவல் வெளியாகியிருக்கு
போக்சோ உள்ளிட்ட வழக்குகள் போடுற அளவுக்கு மலையாள திரையுலகில நடந்த குற்றச் சம்பவங்கள கண்டுக்காம இருந்த கேரள அரசு, பிரச்னை பெருசாகுறத பாத்துட்டு பாலியல் புகார்கள் குறித்து விசாரிக்க சிறப்பு புலனாய்வுக்குழுவை இப்ப அமைச்சருக்கு. இந்த விவகாரம் பூதாகரமாகியிருக்க சூழல்ல புகார் கொடுத்தா விசாரிக்கிறோம்னு சொல்லியிருக்காங்க தேசிய மகளிர் ஆணையம்.