அமெரிக்காவில் முதலமைச்சர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்த நிறுவனங்கள் ஏற்கனவே தமிழகத்தில் உள்ளதாக பாஜக மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
மறைந்த காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஜி.கே.மூப்பனாரின் 23 ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி சென்னை தேனாம்பேட்டை ஜி.என் செட்டி சாலையில் உள்ள அவரது நினைவிடத்தில் அரசியல் கட்சித் தலைவர்கள் மரியாதை செலுத்தினர்.
பாஜக மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன், கரு நாகராஜன், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே.வாசன், IJK கட்சி தலைவர் ரவி பச்சைமுத்து, புதிய நீதி கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் உள்ளிட்ட பலரும் மரியாதை செலுத்தினர்.
இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் தமிழிசை செளந்தரராஜன் தமிழிசை செளந்தரராஜன் கூறியதாவது:
மூப்பனாரின் ஒவ்வொரு நினைவு தினத்தையும் நலத்திட்ட உதவி வழங்கும் விழாவாக ஜி.கே.வாசன் மாற்றிவிடுகிறார். அவரை பாராட்டுகிறேன்.
முதலமைச்சர் முதலீடுகளை ஈர்த்து வந்தால் நல்லதுதான். ஆனால், இதற்கு அடித்தளம் போட்டவர் பிரதமர் மோடி. உலக நாடுகளுக்கெல்லாம் சென்று உலக நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு செய்யும் சூழலை ஏற்படுத்திக் கொடுத்தவர் பிரதமர் மோடி.
வலிமையானவர் இந்தியாவை ஆள்கிறார் என்பதால்தான் அயல் நாட்டினர் முதலீடு செய்கின்றனர். அவர்கள் இன்றைக்கு ஒப்பந்தம் செய்த நிறுவனங்கள் ஏற்கனவே தமிழ்நாட்டில் உள்ளதாக தமிழிசை தெரிவித்தார்.