சேலத்தில் போதைப் பொருட்களை வீடுகளுக்கு சென்று விற்பனை செய்துவந்த பெண் உள்ளிட்ட இருவரை போலீசார் கைது செய்தனர்.
சேலம் டவுண் பகுதியில் வீடுகளுக்கு நேரடியாக சென்று போதைப் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில் அப்பகுதி முழுவதும் சோதனை மேற்கொண்ட போலீசார் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட முபேனா, பாஷா ஆகிய 2 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 15 கிலோ போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.