பாலியல் வன்கொடுமைக்கு எதிராக கடும் சட்டம் இயற்ற வேண்டும் எனக் கூறி, பிரதமர் மோடிக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மீண்டும் கடிதம் எழுதியுள்ளார்.
கொல்கத்தாவில் பெண் மருத்துவர் பாலியல் கொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, இந்த விவகாரத்தில் ஏற்கெனவே பிரதமர் மோடிக்கு மம்தா பானர்ஜி கடிதம் எழுதியிருந்தார்.
இந்நிலையில், பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபடுவோருக்கு குறித்த காலவரையறைக்குள் தண்டனையை நிறைவேற்றும் வகையில், கடும் சட்டம் இயற்றப்பட வேண்டுமென மம்தா மீண்டும் கடிதம் எழுதியுள்ளார்.