தமிழ்நாட்டில் இன்று 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கோவை திருப்பூர் தேனி திண்டுக்கல் திருநெல்வேலி நீலகிரி ஈரோடு சேலம் தர்மபுரி கிருஷ்ணகிரி திருப்பத்தூர் தென்காசி கன்னியாகுமரி மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:
அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 32-33° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என கூறப்பட்டுள்ளது
கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்):
சின்னக்கல்லார் (கோயம்புத்தூர்) 10, வால்பாறை PTO (கோயம்புத்தூர்), உபாசி TRF AWS (கோயம்புத்தூர்), சின்கோனா (கோயம்புத்தூர்) தலா 9, வால்பாறை PAP (கோயம்புத்தூர்), வால்பாறை தாலுகா அலுவலகம் (கோயம்புத்தூர்), சோலையார் (கோயம்புத்தூர்) தலா 7, வேப்பூர் (கடலூர்), திருத்துறைப்பூண்டி (திருவாரூர்) தலா 6 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.