பாரிஸ் பாரா ஒலிம்பிக்கில் ஒரு தங்கம், 2 வெண்கலத்துடன் பதக்க பட்டியலில் இந்தியா 10-வது இடத்தில் உள்ளது.
10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் இந்திய வீராங்கனை லேகரா தங்கமும், அதே பிரிவில் இந்திய வீராங்கனை மோனா அகர்வால் வெண்கலமும் வென்றனர்.
மகளிர் 100 மீட்டர் ஓட்டத்தின் T-35 பிரிவில் கலந்து கொண்ட இந்தியாவின் பிரீத்தி பால், பந்தய தூரத்தை 14.21 வினாடிகளில் கடந்து வெண்கலம் வென்று அசத்தினார். இதனையடுத்து இந்திய வீராங்கனைகளுக்கு பலரும் தங்களது பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.